அவுஸ்திரேலிய வீரர்களிற்கு எதிரான ஆட்டநிர்ணய சதி குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் மற்றுமொரு புலனாய்வு வீடியோவை அல்ஜசீரா வெளியிடவுள்ளது.

இந்தியாவிற்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையில் 2017 இல் ராஞ்சியில் இடம்பெற்ற டெஸ்டில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாக தனது முன்னையை வீடியோவில்  அல்ஜசீரா குற்றம்சாட்டியிருந்தது.

ஆடுகளம் இந்திய அணிக்கு சாதகமாக தயாரிக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்திருந்த அல்ஜசீரா அவுஸ்திரேலிய வீரர்கள் சிலர் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையிலேயே அல்ஜசீரா புதிய வீடியோவொன்றை வெளியிடவுள்ளமை குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையும் உறுதி செய்துள்ளது.

கிரிக்கெட்டில் ஊழல் குறித்த புதிய புலனாய்வு வீடியோவொன்றை அவுஸ்திரேலிய வெளியிடவுள்ளதாக அறிந்துள்ளோம் என  அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் ஜேம்ஸ் சதர்லான்ட் தெரிவித்துள்ளார்.

அல்ஜசீராவின் முதலாவது வீடியோ வெளியான பின்னர்ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அல்ஜசீரா போதிய ஒத்துழைப்பை வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அல்ஜசீரா நாங்கள் விசாரணைகளை மேற்கொள்வதற்கு உதவும் வகையில் தன்னிடமுள்ள வீடியோக்கள் எவற்றையும் எங்களிடம் வழங்கவில்லை எனவுமட அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த பாரதூர குற்றச்சாட்டுகள் குறித்து தீவிரமாக ஆராயவேண்டும் அதனை நாங்கள் செய்துள்ளோம் எனவும் சதர்லாண்ட் தெரிவித்துள்ளார்.