கேரளாவில் பெய்த கடும் மழையினால் கொச்சி விமானத்தளத்திலிருந்து சேவைகள் கடந்த 15 ஆம் திகதி இரத்துசெய்யப்பட்ட நிலையில் நாளை மீண்டும் விமான சேவைகள் வழமைக்கு திரும்பவுள்ளன.

இந்நிலையில் கேரளாவில்  வரலாற்றில் என்றுமில்லாதவாறு கடும் மழை பெய்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்குட்பட்டனர். தொடர்ந்தும் பொதுமக்கள் குடியிருப்புக்களை விட்டு வெளியேறினர். 

பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் நிவராணப் பணிகளை முன்னெடுத்து வருகின்றது. 

அத்தோடு போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டதோடு கடந்த  26 ஆம் திகதி மீண்டும்  கொச்சி விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் ஊழியர்களை கடமைக்கு அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டதால் மூன்று நாட்கள் தொடர்ந்தும் விமானச் சேவை மட்டுப்படுத்தப்பட்டது. எனினும் குறித்த விமான தளங்களில் சுத்திகரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில்  விமான சேவைகள் நாளை 2 மணியளவில் இருந்து வழமைக்கு திரும்பும் என்பது குறிப்பிடத்தக்கது.