தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிவருவதாக அப்படத்தின் இயக்குநர் மோகன் ராஜா தெரிவித்திருக்கிறார்.

நடிகர் ஜெயம் ரவி, அவரது சகோதரர் மோகன் ராஜாவின் இயக்கத்தில் நடித்து வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற படம் தனி ஒருவன்.

இப்படம் வெளியாகி இன்று மூன்றாவது ஆண்டு நிறைவடைகிறது. இந் நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது என்றும், அதில் கதையின் நாயகனாக ஜெயம் ரவி நடிக்கிறார் என்றும் தெரிவித்திருக்கிறார் இயக்குநர் மோகன் ராஜா.

இந்த படத்தில் நாயகியாக நடிக்க காஜல் அகர்வாலிடமும், வில்லனாக நடிக்க அரவிந்தசாமியிடமும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.