கண்டி, கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையொன்று திடீரென மரணமானதால் கண்டி கலஹா வைத்தியசாலை வளாகத்தில்  பதற்றமான சூழல் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கண்டி, கலஹா வைத்தியசாலையில் சுகயீனமுற்ற நிலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையொன்று திடீரென மரணித்துள்ளது.

இதையடுத்து அப்பகுதியில் பெருமளவான பொதுமக்கள் ஒன்றுதிரண்டுள்ளதால் பெரும் பதற்றநிலை தோன்றியுள்ளது.

இந்நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள பதற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.