இலங்­கையின் ஏற்­று­மதி மற்றும் இறக்­கு­மதி என்­பன பாரிய அளவில் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­துடன் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாத காலத்­தி­லி­ருந்து இது­ வ­ரையில் வர்த்­தக இடை­வெளி அதி­க­ரித்­துள்­ள­தா­கவும் மத்­திய வங்கி அறி­வித்­துள்­ளது.

மேலும் நாட்டின் பொரு­ளா­தார வீழ்ச்சி நிலை வலு­வ­டைந்து செல்­வ­தா­கவும் எச்­ச­ரித்­துள்­ளது. இலங்­கையின் வர்த்­தக மற்றும் பொரு­ளா­தார நிலை தொடர்பில் மத்­தியவங்­கி­யினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள விஷேட அறிக்­கை­யிலேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, 2015 டிசம்பர் வரை­யி­லான அரை­யாண்­டுப்­ப­கு­தியில் இலங்­கையின் ஏற்­று­மதி 817.5 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராக 12.7% ஆக வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. மேலும்

இறக்­கு­மதி 1644.7 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளாக 8.5 சத­வீத்­தி­னையும் வெளி­கா­ட்டி­யி­ருந்­ததன் அடிப்­ப­டையில் 827.3 மில்

லியன் அதா­வது 4.4 சத­வீத வர்த்­தக இடை வெளியை வெளிக்­காட்­டி­யுள்­ளது.2015 ஆண்டில் 5.6 சத­வீத்­தி­னாலும் 10505 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் ஏற்­று­ம­தியில் வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ளது. அத்­தோடு இறக்­கு­ம­தியில் 2.5 சத­வீதம் அல்­லது 18935 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் வீழ்ச்­சியை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது.

குறித்த பொரு­ளா­தார வீழ்ச்­சிக்­கான விஷேட கார­ணங்­க­ளாக உலக சந்­தையின் பொருட்­க­ளுக்­கான விலையில் ஏற்­பட்­டுள்ள தலம்பல் நிலை­களும் குறைந்த நிர்­ணய விலை­களும் கார­ண­மாக அமைந்­துள்­ளது.

மேலும் தேயிலை ,இறப்பர்,கட­லு­ணவு பொருட்கள்,ஆடை உற்­பத்தி பொருட்­களின் வரு­மானம் கடந்த வரு­டத்தில் மிகக்­கு­றை­வாக காணப்­பட்­டது. மேலும் உலக சந்­தையில் எண்ணெய் விலையில் ஏற்­பட்­டுள்ள வீழ்ச்சி மற்றும் குறைந்த மின்­வலு உற்­பத்தி போன்­றன இலங்­கையின் ஏற்­று­மதி இறக்­கு­மதி வர்த்­த­கத்தை பெரும் பாதிப்­புக்­குள்­ளாக்­கி­யி­ருக்­கி­றது.

இத­ன­டிப்­ப­டையில் இலங்­கை­யின் ஏற்­று­மதி சந்­தையில் ஐக்­கிய அமெ­ரிக்கா பிரித்­தா­னியா இந்­தியா ஜேர்­மனி மற்றும் இத்­தாலி என்­பன முன்­னிலை வகிப்­ப­தோடு 51 சத­­வீத மொத்த ஏற்­று­மதி வர்த்­த­கத்­திற்கு பங்­க­ளிப்புச் செய்­கின்­றது.

அத்தோடு இந்தியா ,சீனா ஜப்பான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சிங்கப்பூர் என்பன பிரதான இறக்குமதி செய்யப்படும் நாடுகளாக உள்ளன. இது மொத்த இறக்குமதியில் 60 சதவீதமான பங்களிப்வை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.