திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்த மு.கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் அக்கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவு செய்வதற்காக இன்று உட்கட்சி தேர்தலை நடத்துவதற்கு தி.மு.க. தீர்மானித்துள்ளது.இந்நிலையில் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை ஸ்டாலின் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்திருந்தார்.

எனினும் குறித்த பதவிக்கு எவரும் இதுவரையில் வேட்புமனு கையளிக்காத நிலையில் அக்கட்சியின்  தலைவர் பதவிக்கு ஸ்டாலினை ஏகமனதாக  தெரிவு செய்துள்ளதாக செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

இன்று பொதுக்குழு கூடுகின்ற நிலையில்  தி.மு.க. வின் தலைவராக தெரிவு செய்யப்படுபவர் யாரென்பது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.

இந்நிலையில் ஸ்டாலின் தி.மு.க.வின் தலைவராக தெரிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை சமூக வளைத்தளங்களில் பலர் தலைவர் ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி வருகிறன்மை குறிப்பிடத்தக்கது.