ஆசிய விளையாட்டு விழாவில் நேற்று இரவு நடைபெற்ற ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியின் தகுதிச் சுற்றில் இலங்கை வீரர் ஹேரத் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார். 

மூன்று தகுதிச் சுற்றுக்களில் முதல் போட்டியில் கலந்துகொண்ட ஹேரத் பந்தயத் தூரத்தை 1.47.54 செக்கன்களில் நிறைவுசெய்து மூன்றாமிடத்தைப் பெற்றார். 

இதில் முதலிடத்தை பெற்ற இந்தயி வீரர் ஜொன்சன் பந்தயத் தூரத்தை 1.47.39 செக்கன்களில் நிறைவுசெய்தார். தகுதிச்சுற்றில் மொத்தமாக கலந்துகொண்ட 26 பேரில் இலங்கை வீரர் ஹேரத் மூன்றாமிடத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது. 

இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் ஓரிரு செக்கன்கள் முந்தி ஓடினால் பதக்கம் ஒன்று வெல்வதற்கான வாய்ப்பு இருக்கின்றது.