கரம் உலகக் கிண்ணப் போட்­டி­களில் இந்­தி­யாவை வீழ்த்­திய இலங்கை ஆண்கள் கரம் அணி உலக சம்­பியன் பட்­டத்தை வென்று சாதித்­துள்­ளது. 

தென் ­கொ­ரி­யாவில் நடை­பெற்ற கரம் உலகக் கிண்ணத் தொடரில் வெற்­றி­ வேட்­கை­யுடன் கள­மி­றங்கிய இலங்கை கரம் அணி எதி­ர்­பார்ப்பை பூர்த்­தி­செய்து நாட்­டுக்குப் பெருமை சேர்த்­துள்­ளது.

இதில் ஆண்கள் அணி சம்­பியன் பட்­டத்தை வென்­றெ­டுக்­க, இலங்கை மகளிர் அணி இரண்­டா­மி­டத்தைப் வென்று அசத்­தி­யது. இதே­வேளை இலங்கை கரம் சம்­மே­ளனத்­துக்கு நிரந்­தர கட்­டடம் ஒன்­று­கூட இல்­லாத நிலையில் உலக சம்­பியன் பட்­டத்தை வென்று சாதித்­துள்­ளமை விசேட அம்­ச­மாகும்.