முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் முன்­னெடுக்கப்­படும் மகா­வலி எல் வல­யத்­திட்­டத்தில் எவ்­வி­த­மான சிங்­கள குடி­யேற்­றங்­களும் இடம்­பெ­ற­வில்லை. விரைவில் நான் இப்­ப­கு­திக்கு நேரடி கள விஜ­ய­மொன்றை செய்­ய­வுள்ளேன். இதன்­போது கூட்­ட­மைப்பு எம்.பி.க்கள்என்­னுடன் வந்து உண்­மை நிலை­மையை பார்­வை­யிட முடியும் என்று ஜனாதி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று மாலை நடை­பெற்ற  வடக்கு – கிழக்கை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான  விசேட ஜனா­தி­பதி  செய­ல­ணியின்  கூட்­டத்தில்  கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே  அவர் இதனை குறிப்­பிட்டார். 

பல்­வேறு சர்ச்­சை­க­ளுக்கு  மத்­தியில்  கூட்­ட­மைப்பின் பங்­கேற்­புடன் நடை­பெற்ற   இந்தக்  கூட்­டத்தில் வடக்கு – கிழக்கு அபி­வி­ருத்தி,  உட்­கட்­ட­மைப்பு வச­திகள், அடிப்­படை பொரு­ளா­தார  பிரச்­சி­னைகள் என்­பன  குறித்து விரி­வாக  ஆரா­யப்­பட்­டுள்­ளன. 

எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன், இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா உள்­ளிட்ட தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் வடக்கு – கிழக்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், அமைச்­சர்­க­ளான மனோ கணேசன், டி.எம்.சுவா­மி­நாதன், ரஞ்சித் சியம்­ப­லா­பிட்­டிய, கயந்த கரு­ணா­தி­லக்க மற்றும் இரா­ஜாங்க அமைச்சர் சிறி­யாணி விஜே­விக்­கி­ரம, பிரதி அமைச்சர் அங்­கஜன் இரா­ம­நாதன், ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் மற்றும் அரச அதி­கா­ரிகள் உட்­பட பலரும் இந்தக் கூட்­டத்தில் கலந்துகொண்­டி­ருந்­தனர். எனினும் கூட்­ட­மைப்பின் எம்.பி.க்­க­ளான எம்.ஏ.சுமந்­திரன், சிவ­சக்தி ஆனந்தன் ஆகியோர் இந்தக் கூட்­டத்தில் கலந்துகொண்­டி­ருக்­க­வில்லை.

மாலை 3 மணி­ய­ளவில் ஆரம்­ப­மான ஜனா­தி­பதி செய­லணிக் கூட்டம் மாலை 5 மணி­வரை நீடித்­தது. இதன்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கருத்து வெளியி­டு­கையில்,

நான் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்ற போது இரா­ணுவம் வச­மி­ருந்த பொதுமக்­களின் காணி­களில் 88 வீத­மா­னவை விடு­விக்­கப்­பட்­டுள்­ளன. அத்­துடன் முல்­லைத்­தீவில் மகா­வலி "எல்" வலய திட்­டத்­துக்கு எதி­ராக ஆர்ப்­பாட்டம் நடத்தப் போவ­தாகக் கூறு­கின்­றனர். ஆனால் "எல்" வல­யத்தில் எவ்­வி­த­மான சிங்­களக் குடி­யேற்­றங்­களும் இடம்­பெ­ற­வில்லை என்­ப­தைப் பொறுப்­புடன் கூறு­கின்றேன். 

விரைவில் நான் முல்­லை­த்தீவு மாவட்­டத்­துக்கு விஜயம் செய்து கள நிலை­மை­களை ஆரா­ய­வி­ருக்­கின்றேன். அங்கு என்ன நடக்­கின்­றது என்­ப­தைப் பார்க்­க­வுள்ளேன். இதன்­போது வேண்­டு­மானால் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் என்­னுடன் இணைந்து அங்கு நிலை­மை­களைப் பார்­வை­யி­டலாம் என்றார்.

இதன்­போது கருத்துத் தெரி­வித்த எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் குறிப்­பி­டு­கையில்,

எமக்கு அர­சியல் தீர்வே மிக முக்­கி­ய­மா­னது. உட்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளுக்­காக அர­சியல் தீர்வை ஒரு­போதும் விலை பேச­மாட்டோம். பல்­வேறு எதிர்ப்­பு­க­ளுக்கு மத்­தி­யி­லேயே நாம் இந்தக் கூட்­டத்­துக்கு வந்­தி­ருக்­கின்றோம். எனவே அர­சாங்கம் உடன் நட­வ­டிக்­கை­களை விரைந்து எடுக்க வேண்டும். முக்­கி­ய­மாக காணி விடு­விப்பு தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். கேப்­பா­ப்புலவு காணி விடு­விப்பு விட­யத்தில் நீங்கள் வழங்­கிய (ஜனா­தி­பதியைப் பார்த்து) வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. காணி விடு­விப்பு மிகவும் முக்­கி­ய­மா­னது. பொதுமக்­களின் காணிகளை விடு­விக்க துரித நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று வலி­யு­றுத்திக் கூறினார். 

எதிர்க்­கட்சித் தலை­வரின் கருத்தை மிகவும் கூர்­மை­யாக இதன்­போது ஜனா­தி­பதி செவி­ம­டுத்தார்.