(ஆர்.விதுஷா )

சேவனல மற்றும் கிண்ணியா ஆகிய பிரதேசங்களில் நேற்று  இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.  

கிண்ணியா  - மூதூர்  வீதி ஊடாக கிண்ணியா  நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள்  வீதியை விட்டு விலகி வீதியில் பயணித்த சிறுவனின் மீது மோதியமையினால் குறித்த விபத்து சம்பவித்துள்ளது. 

விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார். 09 வயதான மொஹமட் றிசாத் எனும்   கிண்ணியா  பிரதேசத்தை சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். 

அத்துடன்,

சேவனகல பிரதேசத்தில் உடவலவ - தணமல்வில  வீதியூடாக உடவலவ பிரதேசம் நோக்கி பணயித்த தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி பாதை ஓரமாக பயணித்த 59 வயதுடைய மாலா சேனாநாயக்க  எனும் பெண் மீது மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில் விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு

விபத்துக்கள் தொடர்பான மோலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.