ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து ரயில்வே ஊழியர்கள் முன்னெடுக்கவிருந்த பணிபகிஸ்கரிப்பு போராட்டமானது கைவிடப்பட்டுள்ளது.

சம்பளப் பிரச்சினைத் தொடர்பில் ரயில்வே ஊழியர்கள் அனைவரும் நாளை மறுதினம் புதன்கிழமை பணிபகிஸ்கரிப்பில் ஈடுபடவிருந்தனர்.

இந்நிலையில் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ரயில்வே திணைக்களம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

இதன் பின்னரே குறித்த பணிபகிஸ்கரிப்பானது கைவிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.