(எம்.எம்.மின்ஹாஜ்)

பட்ஜெட்டின் போது அரசாங்கத்தை கலைக்க மஹிந்த ராஜபக்ஷ கனவு கண்டுக்கொண்டிருக்கும் இந்த தருவாயில் கூட்டு எதிரணியினர் பத்து பேர் அரசாங்கத்துடன் இணைவதற்கான இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள வரவு செலவுத்திட்டத்தின் போது ஆட்சியை கவிழ்க்க போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். 

இது போன்று இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஆட்சியை கவிழ்ப்பதாக பல தடவை  கூறி வந்த போதிலும் ஒரு பிரயோசனமும் இல்லை. ஆட்சியை கவிழ்ப்பதாக பல தடவை கூறியும்  மஹிந்த ராஜபக்ஷவினால் ஆட்சி கவிழ்ப்பு கனவாகவே மாறியுள்ளது. இனிமேலும் இந்த அரசாங்கத்தை அசைக்கவே முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.