(வியட்நாமிலிருந்து ஆர்.யசி)

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு ஏதுவான முதலீடுகளை அதிகரிப்பதற்கும் வீடமைப்பு, துறைமுக மற்றும் விமான சேவைகளை விஸ்தரிப்பதற்கும் இந்தியா தொடர்ந்தும் பூரண ஒத்துழைப்புகளை வழங்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வியட்நாம் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஹெனோய் நகரின் செரடன் ஹொட்டலில் வைத்து இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்து பேசிய போதே அவர் மேற்கண்டவாறு பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் இலங்கை சார்பாக அமைச்சர் சாகல ரத்நாயக்க, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வியட்நாமிற்கான இலங்கை தூதுவர் ஹசன்தி திஸாநாயக்க,பிரதமரின் மேலதிக செயலாளர் சமன் அதாவுஹெட்டி ஆகியோரும் கலந்து கொண்டனர்.