(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுசெயலாளர் பதவியில் எவ்வித மாற்றங்களும் கிடையாது. கட்சியின் மறுசீரமைப்பு மாத்திரமே இடம்பெறும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சுதந்திர கட்சியில்  கட்சி மறுசீரமைப்பு மாத்திரமே இடம்பெறுமே தவிர பதவிகளில் எவ்வித மாற்றங்களும்  ஏற்படாது. அவ்வாறு பொது செயலாளர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டுமாயின் கட்சியின் தலைவர் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவே அத்தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும். இருப்பினும் தற்போதைய அரசியல் நிலைமையினை மையப்படுத்தி ஜனாதிபதி கட்சியின் முக்கிய பதவிகளில் எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ள மாட்டார் என்ற நம்பிக்கை  காணப்படுகின்றது.

பொது செயலாளர் பதவியில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இதுவரையில் இடம் பெறவில்லை .  ஜனாதிபதி, முன்னாள் அமைச்சர் தயாசிறி  ஜயசேகரவிற்கு பொது செயலாளர் பதவியை  வழங்க முற்பட்டால் அதனை தாங்கள் ஆதரிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.