நெளுக்குளம், முள்ளிப்பிலவு சந்திப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவரிடமிருந்து 100 கிராம் கேரளா கஞ்சாவினை போதை ஒழிப்புப் பிரிவினர் மீட்டுள்ளனர்.
வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபேவிக்கிரமவின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது நெளுக்குளம், முள்ளிப்பிலவு சந்திப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவரிடமிருந்து 100 கிராம் கேரளா கஞ்சாவினை மீட்டுள்ளனர்.
உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஜ.எம். நபீம் தலைமையில் சென்றவர்கள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரான 22 வயதுடைய சிவகுமார் றெஜி என்பவர் செலுத்தி சென்ற மோட்டார் சைக்கிளில் 100 கிராம் கேரளா கஞ்சாவினை பொதி செய்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த வாரத்தில் நெளுக்குளம் பகுதியில் பழுதடைந்த மரை இறைச்சி உணவுகளை வேன் ஒன்றில் மறைத்து எடுத்துச் செல்லப்பட்டபோது இருவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM