அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள  முதலைகள் நிறைந்த காட்டிற்குள் சிக்கியுள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளை மீட்கும் நடவடிக்கையில் அவுஸ்திரேலிய காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

முதலைகள் நிரம்பிய டையின்பொரஸ்ட் என்ற சதுப்புநிலக்காட்டிற்குள் அகதிகள் சிக்குண்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட குழுவினருடன் இணைந்து அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முயன்ற 15 பேரை  கைதுசெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குயின்ஸ்லாந்தின் டெயின்டிரீ ஆற்றுபகுதியில் படகொன்று தடுமாறிக்கொண்டிருப்பதை பார்த்த உள்ளுர் மக்கள் அதிகாரிகளிற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

படகு தரைதட்டியுள்ள பகுதி  முதலைகள் நிறைந்தது என்பதால் அதில் உள்ளவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரியப்படுத்தியுள்ளனர்