வீடியோ கேமினால் வந்த வினை ; அமெரிக்காவில் நால்வர் பலி, 11 பேர் காயம் - காணொளி இணைப்பு

Published By: Priyatharshan

27 Aug, 2018 | 09:53 AM
image

அமெரிக்காவில் வீடிகோ கேம் போட்டிகள் இடம்பெற்ற பகுதியில் இனந்தெரியாத மர்ம நபர் மக்களை நோக்கி திடீரென துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 4 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இச் சம்பவம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள ஜக்சன்வில் லாண்டிங் நகரில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

மதுபான விடுதிகள் அதிகமுள்ள இந்நகரில் வார விடுமுறை தினங்களில் அதிகளவு கேளிக்கை நிகழ்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ஜாக்சன்வில் லேண்டிங் எனும் வணிக வளாகத்தில் விடியோ கேம் விளையாட்டுப் போட்டிகள்  நடைபெற்றன. 

குறித்த வீடியோ கேம் விளையாட்டில், பல்வேறு நபர்கள் போட்டியாளர்களாகவும், பார்வையாளர்களாகவும் பங்கேற்றனர்.

அப்போது இனந்தெரியாத மர்ம நபர் ஒருவர், மக்களை நோக்கி திடீரென துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 4 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், இரண்டு பேர் கேம் விளையாடுகின்றனர் அப்போது பின்னால் அடுத்தடுத்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்கிறது. அதைத்தொடர்ந்து மக்கள் பீதியில் அலறும் சத்தமும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவிக்கையில், 

’கேம் விளையாட்டில் பங்கேற்ற நபர், தோல்வியடைந்ததால் அந்த விரக்தியில் மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார். பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்’ என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08