ஆப்பாகனிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு தலைமை தாங்கி வழிநடத்திய அபுசாட் எர்ஹாபி கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. 

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் ஒரு சில பகுதிகளில் இருந்து வருகிறது. தலிபான்கள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற பயங்கரவாதிகளை ஒடுக்க அந்நாட்டு பாதுகாப்பு படையும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு அமெரிக்க படைகளும் உதவிகளை மேற்கொண்டு வருகின்றது. 

இந் நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கி இருந்த பகுதியில் ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் கூட்டுப்படைகள் மேற்கொண்ட வான் வழித் தாக்குதலில் ஆப்பாகனிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு தலைமை தாங்கி வழிநடத்திய அபுசாட் எர்ஹாபி என்பவர் கொல்லப்பட்டதாக தெரிவித்த அந்நாட்டு அரசாங்கம், இந்த தாக்குதலில் மேலும் 10 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும் அவர்களது ஆயுதங்களும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.