(இந்தோனேஷியாவிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்)

ஜகார்த்தாவின் கலேரா பங் கர்னோ விளையாட்டரங்கின் கரப்பந்தாட்ட உள்ளக அரங்கில் இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் 13 முதல் 20 ஆவது இடங்களுக்கான தரப்படுத்தல் சுற்று ஆட்டத்தில் இலங்கை மற்றும் மாலைத்தீவுகள் அணிகள் மோதின.

இப்போட்டியில் அபாரமாக விளையாடிய இலங்கை அணி, 25-16, 25-18, 25-27 மற்றும் 25-15 என 3 - 1 செட் கணக்கில் வெற்றியைப் பதிவுசெய்தனர். இந்த வெற்றியின் மூலம் இலங்கை கரப்பந்தாட்ட அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.

எனவே எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள அரையிறுதியில் இலங்கை அணியுடன் மோதப்போவது யார் என்பது எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள போட்டிகளின் வெற்றி தோல்வியைப் பொருத்தே அமையும்.