(இந்தோனேஷியாவிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்)

ஆசிய விளையாட்டு விழாவின் 8 ஆவது நாளில் இலங்கை அணி பலப் பிரிவு போட்டிகளில் கலந்துகொண்டிருந்தது. இதில் கரப்பந்தாட்டம் மற்றும் ஹொக்கி ஆகிய போட்டிகளில் வெற்றிகளைப் பதிவுசெய்தது. ஆன போதிலும் இன்றைய நாள் வரையில் இலங்கை அணி எந்தவிதமான பதக்கத்தையும் வெற்றிக்கொள்ள முடியாத நிலையிலேயே இருக்கின்றது.

இவ்வாண்டு ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற கொமன்வெல்த் போட்டிகளில் 54 நாடுகளுடன் போட்டியிட்டு பதக்கங்களை வென்ற இலங்கை அணியால் 45 நாடுகளுடன் போட்டியிட்டு ஆசிய விளையாட்டு விழாவில் எவ்வித பதக்கத்தையும் வெல்ல முடியாமல் இருப்பது சோகமே.

ஆனாலும் குத்துச்சண்டைப் போட்டிகள் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை இதில் பதக்கத்தை வெல்ல வாய்ப்பிருப்பதாக பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

பதக்கப் பட்டியிலில் தொடர்ந்தும் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. ஆசிய பிராந்தியத்தில் விளையாட்டுப் பிரிவிலும் சீனா பலம்பொருந்திய நாடு என்பதை நிருபித்து வருகின்றது. அதற்கு அடுத்த படியாக ஜப்பானும் போட்டிக்கு நிற்கின்றது. மூன்றாவது இடத்தில் கொரியா இருக்கின்றவேளை இந்தியா 9 ஆவது இடத்தில் இருந்து போட்டிப்போட்டிக்கொண்டிருக்கிறது.