நாட்டில் தற்போது காணப்படும் வரட்சியான காலநிலை இந்த மாதம் 15ம் திகதி வரை நீடிக்கும் என காலநிலை மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

தற்போது காணப்படும் வரட்சியான காலநிலையால் இரத்தினபுரி மாவட்டத்தில் அதி கூடிய வெப்பநிலை 36 பாகை செல்சியஸ் என்றும் அதி குறைந்த வெப்பநிலை 26 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக காலநிலை மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.