(எம்.மனோசித்ரா)

அரசாங்கம் ஊழல் மோசடிகளை மேற்கொள்வதாக குற்றஞ்சாட்டும் எதிர்தரப்பினரது பல தேசிய நிதி மோசடிகள் இன்றும் நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வண்ணமே காணப்படுகின்ற நிலையில், இவர்கள் இன்று தேசிய நிதி காப்பாளர்கள் போன்று கருத்துக்களை குறிப்பிடுவது வேடிக்கையாக காணப்படுகின்றது  என விவசாயத்துறை அமைச்சர்  மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கூட்டு எதிர்தரப்பினர் அடுத்த மாதம் 05 ஆம் திகதி  முன்னெடுக்கவுள்ள ஆர்ப்பாட்டத்தினால் அரசாங்கத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. ஜனாபதி, பிரதமர் மற்றும் எதிர் கட்சி தலைவர் பதவி என அனைத்து பதவிகளுக்கும்  தமக்கு  வேண்டும் என  முயற்சித்து, அவற்றில் பாரிய தோல்வியையே சந்தித்துள்ள கூட்டு எதிரணி தற்போது வேறு வேலைகள் எதுவும் இல்லாத காரணத்தினால் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு அரசாங்கத்தை கலைக்க திட்டமிடுகின்றனர். 

ஆனால் என்ன செய்தாலும் அரசாங்கத்தை அவர்களால் கலைக்க  முடியாது என்றார்.