யாழ்ப்பாணம் – நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா நேற்று சனிக்கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது.
சிற்ப சாஸ்திரி ஆகம விதிமுறைப்படி கலையம்சமும் சிற்பங்களும் ஒருங்கே அமையப் பெற்ற அழகிய மஞ்சத்தில் முத்துக் குமாரசுவாமியாக முருகப் பெருமான் எழுந்தருளி அருள் பாலித்தார்.
மஞ்சத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வலம் வருவதை ‘வசந்தோற்சவம்’ என்றும் கூறுவது உண்டு. இந்த மஞ்சத்தில் அண்டவியற் கருத்துக்களும் பௌராணிகர் கருத்துக்களும் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
இந்த அழகிய மஞ்சத்திலே முத்துக் குமாரசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சியினை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் அலங்காரக் கந்தன் மஞ்சத்தில் வீதியுலா வருவதனை படங்களில் காணலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM