(ஆர்.ராம்)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு இரண்டு மாதங்களுக்குள் அறிக்கையை கையளிக்குமாகவிருந்தால் எதிர்வரும் ஜனவரி மாதம் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக மாகாண எல்லை நிர்ணயக் குழுவின் செயலாளரும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளருமான சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறுகையில்,

எல்லை நிர்ணய அறிக்கைக்கு பாரளுமன்றத்தின் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தவதற்கான பரிந்துரையை வழங்குதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐவர் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு சபாநயகர் கருஜெயசூரிய தீர்மானித்துள்ளார். குறித்த குழு இரண்டு மாதங்களுக்குள் தமது பரிந்துரைகளை முன்வைக்கும் பட்சத்தில் ஜனவரியில் தேர்தலை நடத்த முடியும் என்றார்.