மட்டக்களப்பு - பாசிக்குடாவில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் பலியாகியதுடன் மற்றொரு இளைஞர் கால் ஒன்று உடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்வத்தில்  செம்மண்ணோடை பாடசாலை வீதியைச் சேர்ந்த அஹமட் லெப்பை முஹம்மத்  17 வயதுடைய நபரே இவ்வாறு  மரணித்துள்ளார்

இதேவேளை அதே இடத்தைச் சேர்ந்த லத்தீப் முஹம்மத் நிப்றாஸ்  17 வயதுடைய இன்னொருவர் கால் உடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டள்ளார்.

நண்பர்களான இவ்விருவரும் மோட்டார் சைக்கிளில் பாசிக்குடா சென்று திரும்பும் வழியில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் மருங்கிலிருந்த மின் கம்பம் ஒன்றுடன் மோதியதில் விபத்துச் சம்பவித்துள்ளது.

விபத்தில் சிக்கியர்கள் உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் சிகிச்சை பயனின்றி ஒரு இளைஞர் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 குறித்த இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.