சிறுமியொருவரை (8)  பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்த நபரொருவர் ஆடைகள் களையப்பட்டு நிர்வாணமாக வீதியில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஆர்ஜென்டீனாவில் இடம்பெற்றுள்ளது.

புயனொஸ் அயர்ஸில் சாந்த பிறிகிடா பிராந்தியத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட நபர், 8 வயது சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற போது பிரதேசவாசிகளால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டார்.

இதனையடுத்து சினமடைந்த பிரதேசவாசிகள் அந்த நபரின் ஆடையை கிழித் தெறிந்து அவரை நிர்வாணமாக்கி வீதி வழியே இழுத்துச் சென்றனர்.

இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அந்நபரை நிர்வாண நிலையிலேயே கைவிலங்கிட்டு பொலிஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

தொடர்ந்து அந்த நபருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.