இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் வரை திருகோணமலை நகரசபை எல்லைக்குள் 240 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயரிழந்துள்ளார் என பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.

இதேவேளை திருகோணமலை மாவட்ட ரீதியாக இவ்வாண்டு ஆகஸ்ட் மாத காலம் வரை 830 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டள்ளனர்.

அத்துடன் நாடளாவிய ரீதியில் 36,007 பேர் டெங்கு நொயால் இவ்வருடம் மாத்திரம் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.