அமெரிக்க பொருளாதாரத்தில் இலங்கை முக்கியமான நாடாகும்

Published By: Vishnu

26 Aug, 2018 | 10:00 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இந்து - பசுபிக் பிராந்தியத்தின் பரந்துபட்ட பாதுகாப்பிற்கும் அபிவிருத்திகளுக்கும் இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய இரு நாடுகளும் முக்கியமானவையாகும். ஹோர்மூஸ் நீரிணையையும், மலாக்கா நீரிணையையும் இணைக்கும் முக்கியமான கப்பல் பாதையில் இரண்டு நாடுகளுமே அமைந்துள்ளமையானது அமெரிக்காவின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். 

எதிர்காலத்தில் இந்த பிராந்தியத்தில் ஏற்பட கூடிய மாற்றங்கள் மற்றும் சஞ்சலங்களை தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ள நிலையில் அமெரிக்க வெளிவிவகார சேவையின் மூத்த இராஜதந்திரியான அலய்னா பி ரெப்ளிட்ஸ் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் இலங்கைக்கான தூதுவராக  கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்.

இந் நிலையில் இந்து - பசுபிக் கப்பல் வழி போக்குவரத்து அமெரிக்காவின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். ஒவ்வொரு நாட்டினதும் பொருளாதார மற்றும் வணிக வாய்ப்புகளை அமெரிக்கா கவனத்தில் கொண்டுள்ளதாக இலங்கைக்கான நியமனம் குறித்து வெளிநாட்டு உறவுகளுக்கான அமெரிக்க செனட் குழுவின் நேர்முகத் தேர்வுக்காக முன்னிலையான போது அலெய்னா ரெப்லிட்ஸ் குறிப்பிட்டார். 

மேலும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும், நீதியை நிலைநாட்டுவது, பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள், அமைதியான, செழிப்பான எதிர்காலத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கும் அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும். 

பிராந்திய உறுதிப்பாட்டுக்கு அதிக பங்களிப்பை வழங்குவதற்கான இலங்கையின் திறனை வளர்ப்பதற்கும், அதன் சொந்த இறைமை மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கும் அமெரிக்கா ஒத்துழைப்புக்களை வழங்கும். இவ்வகையான முயற்சியானது அமெரிக்காவின் நெருங்கிய பங்காளராக உருவாக்கும். மேலும் திறந்த இந்து - பசுபிக் கண்ணோட்டத்திற்கும் பங்களிப்பை வழங்கும் என்றும் தெரிவித்தார்.

அமெரிக்க வெளிவிவகாரச் சேவையின் மூத்த உறுப்பினரான அலய்னா பி ரெப்ளிட்ஸ் இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக கடமைகளை பொறுப்பேற்க உள்ளார். இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவர் பதவிக்கு அலய்னா பி ரெப்ளிட்ஸ் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை கடந்த மாதம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்திருந்தது. இவர் தற்போது நேபாளத்தில் அமெரிக்க தூதுவராகப் பணியாற்றி வருகிறார்.

1991 ஆம் ஆண்டு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இணைந்து கொண்ட அலய்னா பி ரெப்ளிட்ஸ் , வெளிவிவகாரச் சேவையில் விஞ்ஞானமாணி பட்டத்தை பெற்றவர். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், கொள்கை, முகாமைத்துவத்துக்கான பணியகப் பணிப்பாளராக 2012 தொடக்கம் 2015 காலப்பகுதியில் உதவிச் செயலர் நிலையில் பணியாற்றியிருந்தார். அத்துடன் 2011 தொடக்கம் 2012 காலப்பகுதியில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் முகாமைத்துவத்துக்கான கவுன்சிலராக பணியாற்றியுள்ளார். 

மேலும் 2009-2011 காலகட்டத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை உள்ளடக்கிய, தூரகிழக்கு மற்றும் தெற்கு மத்திய ஆசிய பிரிவின் இணை நிறைவேற்றுப் பணியகத்தின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் கடமையிலிருந்துள்ளமை குறிப்பிபடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் எவ்வாறு...

2025-03-23 17:50:25
news-image

முஸ்லிம் கட்சிகளிடையே அதிகாரப் போட்டி

2025-03-23 15:29:45
news-image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காட்டில்...

2025-03-23 14:49:08
news-image

சுயபிம்பத்தை ஊதிப்பெருக்கும் அதிகார வெறிக்குள் பகடைக்...

2025-03-23 14:54:45
news-image

ஜோர்தானின் அப்துல்லாஹ்வுக்கும் ஸெலென்ஸிக்கும் இடையிலான வித்தியாசம்

2025-03-23 14:43:28
news-image

கிறீன்லாந்து – எதிர்காலம் என்ன?

2025-03-23 14:29:17
news-image

முஸ்லிம் அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும்...

2025-03-23 15:19:29
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம்; அரசாங்கத்துக்கு தோல்வியா?

2025-03-23 15:02:53
news-image

புதிய கூட்டு வலுப்பெறுமா?

2025-03-23 13:13:37
news-image

சி.ஐ.ஏயின் இரகசியத்தளம்

2025-03-23 13:00:56
news-image

இதுவா சமத்துவ நிலை?

2025-03-23 13:06:07
news-image

பொன்சேகாவை அரவணைப்பாரா அநுர?

2025-03-23 12:42:43