நாடளாவிய  ரீதியில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் பல குற்றங்களை புரிந்தவர்கள் மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.நாட்டில் 11 மணிநேரம் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில்,  பல குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 700 பேர் உள்ளிட்ட 3099 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சுற்றிவளைப்பு நேரத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 4967 குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.