சிறுவர் மற்றும் மகளிர் உரிமைகளை பாதுகாப்பதே நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான இலக்குகளாகும் என சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பணிடார தெரிவித்தார்.

அதற்கான பணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் அரசு மிகத்துரிதமாக முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று காலை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் மற்றும் மகளிர் பணியத்தை திறந்து வைக்கும் வைபவத்தில் அமைச்சர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போது இவ்வாறு தெரிவித்தார்.

இப்பணியகத்தினூடாக சிறுவர் மகளிருக்கெதிரான துஸ்பிரயோகங்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கெதிரான செயற்பாடுகளை பொலிஸ் திணைக்களம் முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(ஜவ்பர்கான், பழுலுல்லாஹ் பர்ஹான்)