4 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட பின்னர் தனது வருங்கால கணவனின் தொலைபேசியில் ஆபாச படம் இருந்ததன் காரணமாக குறித்த பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் உடா பகுதியை சேர்ந்த க்ளாய்ரே 21 வயதான டால்டன் என்ற பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் தனது திருமணம் நடக்காது என நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கூறியுள்ளார். அதற்கான காரணத்தையும் அந்த பதிவில் க்ளாய்ரே தெரிவித்துள்ளார்.

4 ஆண்டுகளாக காதலித்து சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட தனது வருங்கால கணவனின் தொலைபேசியில் ஆபாச படங்கள் இருந்ததே திருமணம் நிறுத்தப்பட்டதற்கு காரணம். மிகவும் மதநம்பிக்கை கொண்டதாக தன்னை கூறிக்கொண்ட அந்த பெண், கடவுளின் விதிகள் சுற்றிய ஒரு உறவு எங்களுக்குள் வேண்டும் என விரும்பியதாக பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தனது வருங்கால கணவரிடம் க்ளாய்ரே கேட்டுள்ளார். அதற்கு ‘தனது சகோதரன் அந்த படங்களை பார்த்ததாகவும். தன் மீது தவறில்லை’ எனவும் வாதிட்டுள்ளார். ஆனாலும், அதனை ஏற்றுக்கொள்ளாத க்ளாய்ரே நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

க்ளாய்ரேவின் இந்த பேஸ்புக் பதிவுக்கு பலர் ஆறுதலாகவும், பலர் கிண்டலாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.