இலங்கையில் போன்று ஏனைய நாடுகளிலும் டொலர்களின் பெறுமதி பாரிய தாக்கத்தினை செலுத்தி வருகின்றதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.கடந்த காலங்களில் டொலரின் மதிப்பு தொடர்பிலும் பிரச்சினைகளை நாம் எதிர்கொண்டுள்ளோம். 

உள்ளூர் கட்டுமானப்பணிகளை போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்றியமைப்பதற்கும் டொலர்களின் பெறுமதியை அதிகரிப்பதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

இலங்கையில் போன்று ஏனைய நாடுகளிலும் டொலர்களின் பெறுமதி பாரிய தாக்கத்தினை செலுத்தி வருகின்றது. 

இருந்தப்போதிலும் இது தற்காலிகமாக இருக்கும் பிரச்சினையாகவும் கருதப்படுகின்றது.

மேலும் கட்டுமான கைத்தொழிலில் வெளிநாட்டு தொடர்பை பொறுத்தமட்டில் போட்டித்தன்மையை எதிர்க்கொள்ள வேண்டியுள்ளமையினால் உள்ளுர் கட்டுமானப்பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்றார் . 

2018 ஆம் ஆண்டுக்கான கட்டுமான நிர்மானதுறைசார் கண்காட்சி அங்குரார்ப்பன நிகழ்வு இன்று  பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 

இதில் கலந்து கொண்டு குறித்த  உரையாடலின் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க  இதனை தெரிவித்தார்.