(நா.தினுஷா) 

தேர்தல் முறைமை தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் நிலையே மாகாணசபை தேர்தல் பிற்போடப்பட்டுவருவதற்கு காரணமாகும்.

தேர்தலை விரைவாக  நடத்துவதற்கே  முயற்சித்து வருகின்றோம் தேர்தல் முறைமை தொடர்பான தீர்மானங்கள் கிடைக்கப்பெற்றவுடன் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான முயற்சிகளை எடுப்போம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

மாகாணசபைகளுக்கான தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதில் சிக்கல்நிலை தோன்றியுள்ளது. அதாவது தேர்தலை எம்முறைமையில் நடத்துவது என்பதில் உடன்பாடற்ற தன்மை காணப்படுகின்றமையானது தேர்தல் பிற்போடப்படுவதற்கு காரணமாகியுள்ளது. 

இருந்தபோதிலும் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பான இறுதித் தீர்மானங்களின் அடிப்படையில் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான முயற்சிகளை எடுப்போம். 

2018 ஆம் ஆண்டுக்கான கட்டுமான நிர்மானதுறைசார் கண்காட்சி அங்குரார்ப்பன நிகழ்வு இன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.