எமது நாட்டில் பெற்றோலியக் கூட்டுத்தாபனமே திறைசேரிக்கு அதிக வரியை செலுத்தும் நிறுவனமாகும் என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க  தெரிவித்துள்ளார்.இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய ஸ்டோரேஜ் டர்மினல்ஸ் ஆகிய நிறுவனங்களில் 25 ஆண்டுகள் திருப்த்திகரமான சேவையை பூர்த்தி செய்த ஊழியர்களை கொளரவப்படுத்தும் முகமாக அவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கும் நிகழ்வின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வருகைதந்திருந்தனர்.

 மேலும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி பிரதியமைச்சர் வைத்தியர் அனோமா கமகே, அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க, கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,'திறைசேரிக்கு 2016 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தொகையானது ரூபா.148 பில்லியன் ஆகும், 2017 ஆம் ஆண்டு ரூபா.148 பில்லியன் ஆகும். ஆறுமாத காலத்திற்குள் 2018ஆம் ஆண்டு முதல் ஆறுமாதத்திற்குள் ரூபா.68 பில்லியன் செலுத்தப்பட்டுள்ளது. 

மக்கள் மத்தியில் எண்ணம் உள்ளது கூட்டுத்தாபன ஊழியர்களே அதிக சம்பளம் பெறுபவர்கள் என்ற எண்ணம் காணப்படுகின்றது. எனினும் நாம் புரிந்துகொள்ள வேண்டியது கூட்டுத்தாபன ஊழியர்களுக்குப் பின்னால் உள்ள கஷ்டங்கள்.

 பெற்றோலிய கூட்டுத்தாபனம் என்பது வெறும் பெற்றோலை நிரப்பும் நிலையம் அல்ல. அவர்களது கடின உழைப்பு காரணமாகவே நாங்கள் அதிக வரியை திறைசேரிக்கு கொடுக்கின்றோம். 

நிறைய பேர் எதிர்பார்க்கின்றனர் கூட்டுத்தாபனம் இலாபம் ஈட்டாவிட்டால் அதனை தனியார் மயப்படுத்த வேண்டும் என்று. 

எனினும் நாம் துறைமுகத்தில் இருந்த வேலையில் அதனை ஒரு இலாபம் ஈட்டும் இடமாக மாற்றியமைத்தோம். 

அதேபோலவே கூட்டுத்தாபனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாகவும் மக்களுக்கு அதிக சேவைசெய்யும் நிறுவனமாகவும் மாற்றமடையும். 

நான் இருக்கும் வரைக்கும் இந்த நிறுவனத்தை பாதுகாப்பேன்' என அவர் மேலும் தெரிவித்தார்.