கொட்டகலை நகரில் கழிவு தேயிலை தூள் கலப்படம் செய்து வியாபார நடவடிக்கையில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் ஒருவர் இன்று மதியம் தலவாக்கலை பொலிஸ் விசேட அதரடிபடையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நீண்ட நாட்களாக பாவனை செய்யக்கூடிய தேயிலை தூள்களுடன் கழிவு தேயிலை தூள்களை கலவையிட்டு வியாபாரத்தில் ஈடுப்பட்டு வந்துள்ளதாக அதிரடை படையினர் தெரிவித்தனர்.

கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, உரிமையாளர் கைது செய்யப்பட்டதோடு, குறித்த இடத்திலிருந்து 150 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதன்பின் கைப்பற்றப்பட்ட கழிவு தேயிலை தூளையும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் விசேட அதிரடிபடையினர் ஒப்படைத்துள்ளனர்.

அத்தோடு, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் பிணையில் விடுதலை செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும், எதிர்வரும் நாட்களில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸ் விசேட அதிரடைபடையினரும், திம்புள்ள பத்தனை பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.