எல்லை நிர்ணய அறிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கின்றது - மாவை

Published By: Priyatharshan

24 Aug, 2018 | 03:57 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி )

வடக்கு கிழக்கிலும் அதற்கு வெளியிலும் வாழும் தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகளை அழிக்கவே முயற்சிக்கள் இடம்பெறுகின்றன என  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் மாவை சேனாதிராஜா எம்.பி தெரிவித்தார். 

தமிழ், முஸ்லிம் மக்களின் சார்பில் முன்வைக்கப்பட்ட சகல கோரிக்கைகளையும் நிராகரித்தே எல்லை நிர்ணய அறிக்கையை  தயாரித்துள்ளனர் .

தமிழ்,முஸ்லிம் மக்களை முழுமையாக நிராகரித்து பெரும்பான்மையின் வெற்றிக்காக சிறுபான்மை இனத்தவர் பாடுபடும் தேர்தல் எல்லை முறைமையையே இந்த அரசாங்கம் கொண்டுவந்துள்ளது. 

வடக்கு கிழக்கிலும் அதற்கு வெளியிலும் வாழும் தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகளை அழிக்கவே முயற்சிக்கின்றனர். 

நாம் வடக்கு கிழக்கின் தமிழ் பேசும் மக்களின் நலன்களையும் வடக்கு கிழக்கிற்கு வெளியில் வாழும் தமிழ் பேசும் மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டே சிந்திக்கின்றோம். அதற்கமையவே நாம் எமது ஆலோசனைகளை முன்வைத்தோம். எனினும் எமது கருத்துக்கள் எவையும் கவனத்தில்கொள்ளப்படாது. சிறுபான்மை மக்களின் நிலைமைகளை கருத்தில் கொள்ளாது, எம்மை புறக்கணிக்கும் வகையில் இப்போது எல்லை நிர்ணய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 

புதிய எல்லை நிர்ணய அறிக்கை மூலமாக சிறுபான்மை மக்களுக்கு எந்த நன்மைகளும் இல்லை, இது பெரும்பான்மை மக்களின் நலன்களை, விருப்பங்களை மாத்திரம் கருத்தில் கொள்ளப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களை, மலையக தமிழ் மக்களை, முஸ்லிம் மக்களை முழுமையாக நிராகரித்து அனைவரும் சிங்கள பெரும்பான்மையினரின் வெற்றிக்காக செயற்பட வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. 

இந்த நாட்டில் தமிழ் மக்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்தனர். சிறுபான்மை இனத்தவர் பல சந்தர்ப்பங்களில் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இன்று சர்வதேசம் இலங்கைக்கு எதிராக தீர்மானங்களை கொண்டுவந்து மனித உரிமைகள் பேரவையில் பேசுகின்றது என்றால் அதற்கு இந்த நாட்டில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட அழிவுகளே காரணமாகும். அவ்வாறான நிலையில் மேலும் மேலும் சிறுபான்மை மக்களை அடக்கும் நடைமுறையாகவே இதனையும் நாம் பார்க்கின்றோம். 

ஆகவே இப்போது கொண்டுவரப்பட்டுள்ள எல்லை நிர்ணய அறிக்கையை வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்காவும், மலையகத்தின் தமிழ் பேசும் மக்களுக்காகவும், முஸ்லிம் மக்களுக்காவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கின்றது.

வாக்கெடுப்பை நடத்தினால் அதனை எதிர்த்தே நாம் வாக்களிப்போம். அதேபோல் மாகாணசபை தேர்தல் முறைமைக்கான புதிய எல்லை நிர்ணய அறிக்கையை தயாரித்து அதில் தமிழ் முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவத்தை பலப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாகாணசபை தேர்தல் தொகுதி எல்லைகளை நிர்ணயிக்கும் குழுவின் அறிக்கை மீதான விவாதத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08