(எம்.மனோசித்ரா)

மன்னார் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நகர் பகுதியில் சுமார் 1300 போதை மாத்திரைகளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மன்னார் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

டிரமடோல் எனப்படும் 1300 போதை மாத்திரைகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தர்ப்பத்திலேயே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்கள் இன்று மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.