பதுளை ஹாலிஎல ரொசைட் தோட்டம் 2 ஆம் பிரிவைச் சேர்ந்த மகாலிங்கம் நிஷாந்தினி என்பவரை கடந்த 25 நாட்களாக காணவில்லையென அவரது கணவர் தியாகராஜா ராஜ்குமார் மட்டக்குளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பதுளை ஹாலிஎல ரொசைட் தோட்டம் 2 ஆம் பிரிவைச் சேர்ந்த மகாலிங்கம் நிஷாந்தினி என்பவர் குறித்த முகவரியைச் சேர்ந்தவரெனவும் தாம் இருவரும் காதல் திருமணம் செய்து கொழும்பு மட்டக்குளி இல. 47 ஜீ சமந்திபுர எனும் முகவரியில் வசித்து வந்தததாகவும் தாம் இருவரும் வியாபாரத்தினை மேற்கொண்டு வந்ததாகவும் இந்நிலையிலேயே குறித்த பெண்ணான தனது மனைவி வியாபார நிலையத்திலிருந்தே திடீரென காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் கணவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனது மனைவியை இனங்கண்டால் அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 0703397960, 0769746545 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலமோ தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கணவரான ராஜ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த 25 நாட்களாக பொலிஸாரும் தனது மனைவி இருக்குமிடம் குறித்து தேடுதல் நடத்தியும் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லையென கணவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொலிஸ் முறைப்பாட்டை வழங்கிய கணவரான தியாகராஜா ராஜ்குமார்  மஸ்கெலியா சாமிமலை பகுதியைச்சேர்ந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.