மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இன்று அதிகாலை 29 தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

தலைமன்னார் வடக்குப் பகுதியில் ஒரு றோலர் படகுடன் 9பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தலைமன்னார் தெற்குப் பகுதியில் 3மீன்பிடி சிறுபடகுகளுடன் 20 பேர் கைது செய்யப்பட்டனர் எனவும் அவர்களை மன்னார் கற்பிட்டிப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.