ரயில்வே ஊழியர்கள் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக ரயில் சேவை தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.ரயில்வே ஊழியர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் சம்பள உயர்வு கோரி போராட்டத்தை முன்னெடுத்த நிலையில் குறித்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் தமது சம்பளப் பிரச்சினைக்கு அதிகாரிகள் தீர்வை வழங்கத் தவறியமையால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி நள்ளிரவு முதல் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக ரயில் சேவை தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.