மாகாண சபை­க­ளுக்­கான புதிய தேர்தல் முறைமை தொடர்­பான எல்லை மீள் நிர்­ணய அறிக்­கை ­மீ­தான விவாதம் இன்று வெள்­ளிக்­கி­ழமை இடம் பெ­ற­வுள்ளது.

இந்நிலையில், வாக்­கெ­டுப்பு நடை­பெற்றால் குறித்த எல்லை நிர்­ணய அறிக்­கைக்கு எதி­ராக வாக்­க­ளிப்­ப­தற்கு ஐக்­கிய தேசிய முன்­ன­ணியும் கூட்டு எதி­ர­ணியும் தீர்­மா­னித்­துள்­ளன. அதே­போன்று சிறு­பான்மை கட்­சி­களும் எதி­ராக வாக்­க­ளிப்­ப­தற்கு ஏற்­க­னவே தீர்­மா­னித்­தி­ருந்­தன. எனினும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் ஆத­ர­வாக வாக்­க­ளிக்­க­வுள்­ளன. 

மாகாண சபை­க­ளுக்­கான புதிய தேர்தல் முறை­மையின் எல்லை நிர்­ணய அறிக்­கையில் குள­று­ப­டிகள் நடந்­துள்­ள­தா­கவும் சிறு­பான்மை இன மக்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்ள தாகவும் கூறி புதிய தேர்தல் முறை­மைக்கு சிறு­பான்மை இனங்­களை பிர­தி­நி­தித்­துவப் படுத்தும் கட்­சிகள் எதிர்ப்பு வெளி­யிட்­டி­ருந்­தன. எனினும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் பழைய முறை­மைக்கு மீண்டும் செல்­வது உகந்­தது அல்ல. ஆகவே புதிய முறை­மையின் கீழ் தேர்­தலை நடத்த வேண்டும் என திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்­ளன. புதிய முறை­மையின் கீழ் தேர்­தலை நடத்த வேண்டும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் உறு­தி­யாக உள்ளார்.

தேர்தல் முறைமை தொடர்­பாக பல தடவை கட்சி தலை­வர்கள் கூட்டம் இடம்­பெற்ற போதும் இணக்­க­பாடு எட்­டப்­ப­ட­வில்லை. இதனால் இறு­தி­யாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நடை­பெற்ற கட்சி தலைவர் கூட்­டத்தில் புதிய தேர்தல் முறை­மையின் எல்லை நிர்­ணய அறிக்­கையை வெள்­ளிக்­கி­ழமை விவா­தத்­திற்கு எடுத்து வாக்­கெ­டுப்பும் நடத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இதன்­படி எல்லை நிர்­ணய குழுவின் அறிக்­கையை நிறை­வேற்­று­தாயின் சபைக்கு வருகை தராத பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உட்­பட மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை ஆத­ரவு தேவை­யாகும். 

புதிய முறை­மைக்­கான எல்லை நிர்­ணய அறிக்­கைக்கு மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை இல்லை என்றால் பழைய முறைமை மீண்டும் பாரா­ளு­மன்­றத்­திற்கு கொண்டு வரப்­படும். அதனை நிறை­வேற்­று­வ­தற்கும் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை அவ­சி­ய­மாகும்.

இதன்­படி பாரா­ளு­மன்­றத்தில் அதிக ஆச­னங்­க­ளுக்கு உரித்­து­ரிமை உள்ள கட்­சி­யான ஐக்­கிய தேசியக் முன்­ன­ணியின் நிலைப்­பாடு எல்லை நிர்­ணய அறிக்­கையை நிறை­வேற்ற அத்­தி­யா­வ­சி­ய­மாகும்.

இந்­நி­லையில் ஐக்­கிய தேசியக் முன்­ன­ணி­யி­னதும் கூட்டு எதி­ர­ணி­யி­னதும் பாரா­ளு­மன்ற மன்ற குழு கூட்­டங்கள் நேற்று காலை பாரா­ளு­மன்ற கட்­டத்­தொ­கு­தியில் நடை­பெற்­றன. ஐக்­கிய தேசியக் முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற குழுக் கூட்டம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் பாரா­ளு­மன்ற கட்­ட­டத்­தொ­கு­தியில் நடை­பெற்­றது. இதன்­போது இன்று விவா­தத்­திற்கு எடுத்து வாக்­கெ­டுப்பு நடத்த உத்­தே­சித்­துள்ள புதிய தேர்தல் முறை­மையின் எல்லை நிர்­ணய அறிக்­கைக்கு எதி­ராக வாக்­க­ளிப்­ப­தற்கு இங்கு தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. 

 இதன்­படி எல்லை நிர்­ணய அறிக்­கைக்கு எதிர்ப்பு வெளி­யிடும் வகையில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் வாக்­கெ­டுப்பில் இருந்து வில­கி­யி­ருக்க கூடிய வாய்ப்பு அதி­க­மாக உள்­ளது.

என்­றாலும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­காளி கட்­சி­க­ளான தமிழ் முற்­போக்கு கூட்­டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகி­யன எதி­ராக வாக்­க­ளிக்கும். அதே­போன்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு, ஈழ மக்கள் ஜன­நா­யக கட்சி, இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் ஆகி­ய­னவும் எதி­ராக வாக்­க­ளிக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

 அதே­போன்று கூட்டு எதி­ர­ணியின் பாராளுமன்ற குழு கூட்டமும் நேற்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போதும் புதிய தேர்தல் முறைமைக்கான எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களிக்க தீர்மானிக்கப்பட்டது. 

எனினும் புதிய தேர்தல் முறைமைக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.