கொக்குவில் பகுதியில் நேற்று மாலை வீடு ஒன்றுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுப்பட்டார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்குவில் முதலி கோவிலடியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

கொக்குவில், தாவடி மற்றும் இணுவில்  என அடுத்தடுத்து 5 இடங்களில் வன்முறை இடம்பெற்றது. எனினும் கொக்குவில் பிரம்படி லேனில் வீடு ஒன்றுக்குள் புகுந்த சம்பவம் தொடர்பிலேயே யாழ்ப்பாணம் பொலிஸாரால் விசாரணை நடத்தப்படுகிறது.

அதனால் அந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். அவர் விசாரணைகளின் பின்னர் நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்” என்று யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.