ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் மிஹின் எயர் ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸின் முன்னாள்  தலைவர் நிசந்த விக்கிரமசிங்கவும்  முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபிலசந்திரசேனவும் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

இன்று காலை 10.30 மணியளவில் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸின் முன்னாள்  தலைவர் நிசந்த விக்கிரமசிங்கவும்  முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபிலசந்திரசேனவும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளனர்.

இதனை தொடர்ந்து ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள் மூலம் வெளியான விபரங்கள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஸ்ரீலங்கன் எயர்லைன்சில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு கடந்த மே மாதம் முதல் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.