தல அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தயாரிப்பு நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ் உறுதிப்படுத்தியிருக்கிறது.

தல அஜித்குமார் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படபிடிப்பு ஹைதரபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலையில் விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அத்துடன் இப்படம் பொங்கல் அன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதில் அஜித்குமாருடன் நயன்தாரா, விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, தம்பி ராமையா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கியிருக்கிறார்கள்.