இந்தோனேஷியாவில் நடைபெற்றும் ஆசிய விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டிகளில் 100 மீற்றர் ப்ரீ ஸ்டைல் பிரிவின் இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட இலங்கையின் நட்சத்திர நீச்சல் வீரரான மெத்தியூ அபேசிங்க இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை வென்று கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போட்டியில் ஆறாவது இடத்தைப் பிடித்து ஏமாற்றினார்.இந்தப் போட்டியில் பந்தயத் தூரத்தை 48.71 செக்கன்களில் நிறைவுசெய்த ஜப்பான் வீரர் தங்கத்தையும், 48.72 செக்கன்கள் எடுத்துக்கொண்டு மற்றொரு ஜப்பான் வீரர் வெள்ளியையும் சீன வீரர் வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர். தில் இலங்கை வீரரான மெத்தியூ அபேசிங்க பந்தயத் தூரத்தை 49.28 செக்கன்களில் நிறைவுசெய்து ஆறாவது இடத்தைப் பெற்று ஏமாற்றினார்.

45 ஆசிய நாடுகள் பங்கேற்பில் நடைபெற்றும் ஆசியவிளையாட்டுப் போட்டிகள் இந்தோனேஷியா தலைநர் ஜகர்த்தா மற்றும் பாலம்பேர்க் நகரில் நடைபெற்றுவருகின்றது. கடந்த சனிக்கிக்கிழமை ஆரம்பமான இந்தப் போட்டித் தொடரில் குழு விளையாட்டுக்களில் பங்கேற்றிருந்து கபடி அணி, கடற்கரை கரப்பந்தாட்டம், கரப்பந்தாட்ட அணி ஆகியவரை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

இந்நிலையில் இன்று ஆரம்பமாகும் குத்துச்சண்டைப் போட்டிகளில் இலங்கைக்கு பதக்கங்கள் வெல்ல வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகின்றது. 

காரணம் பொதுநலவாய விளையாட்டு விழாவரில் இலங்கை வீர வீராங்கனைகள் பதக்கம் வென்று அசத்தியிருந்தனர். 

அதன் தொடர்சியாக ஆசிய போட்டிகளிலும் பதக்கம் வெல்ல வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படகின்றது.