அரச துறையினரின் சம்பள மீளாய்வு பற்றிய விசேட ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமனம்

Published By: Daya

23 Aug, 2018 | 05:06 PM
image

அரச துறையினரின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பாக தற்போது நடைமுறையிலுள்ள சுற்றறிக்கைகள், ஏற்பாடுகள் தொடர்பாக கவனஞ்செலுத்தி, அரச துறையினரின் சம்பளம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகளோ முரண்பாடுகளோ காணப்படின் அவற்றைக் குறைப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக சம்பள மீளாய்வு பற்றிய விசேட ஆணைக்குழுவொன்றினை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2018.08.14 ஆம் திகதியன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கமைய ஜனாதிபதியினால் இந்த விசேட ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

திரு.எஸ்.ரணுக்கே தலைவராகவும், திரு.எச்.ஜி.சுமனசிங்க செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள அந்த விசேட ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக பின்வருவோர் செயற்படுவர்.

திரு. கே.எல்.எல்.விஜேரத்ன

திரு. டீ.பீ.கொல்லுரே

திரு. சீ.பீ.சிறிவர்தன

திருமதி. சுதர்மா கருணாரத்ன

திரு. ஜனக்க சுகததாச

திருமதி. தாரணி எஸ்.விஜேதிலக்க

திரு. லலித் ஆர். த. சில்வா

திரு. பி.எஸ்.எதிரிசிங்க

திரு. ஏ.ஆர்.தேசப்பிரிய

திருமதி. பீ.பி.பி.எஸ்.அபேகுணரத்ன

திரு. வைத்தியர் பாலித்த அபேகோன்

திரு. பீ.தங்கமயில்

திரு. எஸ்.டி.ஜயக்கொடி

திரு. எம்.சி.விக்ரமசேகர

விசேட சம்பள ஆணைக்குழுவின் செயற்பணிகளும் பொறுப்புக்களும் பின்வருமாறு அமைகின்றன.

1. அரச சேவையினரின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பாக தற்போது நடைமுறையில் உள்ள சம்பளக் கொடுப்பனவு சுற்றறிக்கைகள், ஏற்பாடுகள் தொடர்பாக கவனஞ்செலுத்தி, இலங்கை புகையிரத திணைக்களத்தின் மேற்பார்வை முகாமைத்துவ சேவையின் பிரிவினருக்கு முன்மொழியப்பட்டுள்ள சம்பள அளவுத்திட்டத்தை பெற்றுக்கொடுப்பதனால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் ஆய்வு செய்தலும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை முன்வைத்தலும்

2. அண்மையில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்த புகையிரத சேவை, சுகாதாரம், உயர்கல்வி, கல்வி மற்றும் தபால் சேவையினருக்கு தற்போது நடைமுறையிலுள்ள சம்பள சுற்றறிக்கைகளினால் சம்பள முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாயின் அவற்றை குறைப்பதற்கான தீர்வுகளை முன்வைத்தல்.

3. நாடளாவிய சேவைகளுக்குரிய சம்பள பிரச்சினைகளை போன்றே வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு காரணமாக தற்போது ஏற்பட்டுள்ளதாக இனங்காணப்பட்டுள்ள சம்பள முரண்பாடுகளை குறைப்பதற்கான சிபாரிசுகளை முன்வைத்தல்.

4. சம மட்டத்திலான பொறுப்புக்களை வகிக்கும் அல்லது சமமான தகுதிகளையுடைய தொழிற்துறையினரால் அரச மற்றும் பகுதியளவிலான அரச துறைகளில் பெறப்படும் சம்பளம், வேதனம் மற்றும் கொடுப்பனவுகள் ஆகியவற்றிற் கிடையே நிலவும் முரண்பாடுகளை குறைப்பதற்கு வழிகாட்டும் சம்பளம் மற்றும் வேதனக் கட்டமைப்பு பற்றிய சிபாரிசுகளை முன்வைத்தல்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் எவ்வாறு...

2025-03-23 17:50:25
news-image

முஸ்லிம் கட்சிகளிடையே அதிகாரப் போட்டி

2025-03-23 15:29:45
news-image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காட்டில்...

2025-03-23 14:49:08
news-image

சுயபிம்பத்தை ஊதிப்பெருக்கும் அதிகார வெறிக்குள் பகடைக்...

2025-03-23 14:54:45
news-image

ஜோர்தானின் அப்துல்லாஹ்வுக்கும் ஸெலென்ஸிக்கும் இடையிலான வித்தியாசம்

2025-03-23 14:43:28
news-image

கிறீன்லாந்து – எதிர்காலம் என்ன?

2025-03-23 14:29:17
news-image

முஸ்லிம் அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும்...

2025-03-23 15:19:29
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம்; அரசாங்கத்துக்கு தோல்வியா?

2025-03-23 15:02:53
news-image

புதிய கூட்டு வலுப்பெறுமா?

2025-03-23 13:13:37
news-image

சி.ஐ.ஏயின் இரகசியத்தளம்

2025-03-23 13:00:56
news-image

இதுவா சமத்துவ நிலை?

2025-03-23 13:06:07
news-image

பொன்சேகாவை அரவணைப்பாரா அநுர?

2025-03-23 12:42:43