தனியார் வைத்தியசாலைகளுக்கான கட்ணங்களை ஒழுங்குறுத்தும் நடவடிக்கை அடுத்த வாரம் இடம்பெறுமென சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜயசிங்கவிற்கு, விலை ஒழுங்குறுத்தலுக்கான ஆவணத்தை விரைவில் தயாரிக்குமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்நிலையில், இறுதி அறிக்கை எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ள நிலையில், குறித்த யோசனை வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவுள்ளது. 

ஆய்வுகூட பரிசோதனை, மகப்பேறு, சத்திரசிகிச்சை என்பனவற்றுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் இதன்போது ஒழுங்குறுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.