முதலைக்கு இரையாகிய மூதாட்டி

Published By: R. Kalaichelvan

23 Aug, 2018 | 04:04 PM
image

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புணானை மயிலந்தனை பிரதேசத்திலுள்ள மகாவலி ஆற்று நீரோடையில் குளிப்பதற்காகச் சென்று காணமால்போன மூதாட்டி   சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு ஆற்றில் காணமல்போனதாக தெரிவிக்கப்பட்ட  மூதாட்டியின் சடலத்தின் ஒரு பகுதியே  இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பொன்னன் மாரியாய் என்ற 70 வயது மூதாட்டியே இவ்வாறு சடலமாக  மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

நேற்று மாலை வீட்டில் மதிய உணவிற்கான சமையல் பணிகளை முடித்து விட்டு அருகில் உள்ள நீரோடையில் குளிப்பதற்காகச் சென்றவர் மாலை நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

எனினும் உறவினர்கள்  சம்பவ இடத்திற்கு சென்று  தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீரோடையில் முதலைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதனால் முதலை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம்  என நீரோடையில் தேடும் பணியினை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது அவர்  குளிப்பதற்காக அணிந்திருந்த சேலையினை உறவினர்கள் மீட்டுள்ளதோடு அது கிழிந்த நிலையில் காணப்பட்டுளளது.

இதேவேளை சடலம் கிடைக்காமையினால் பொலிசாரின் உதவியுடன் சடலத்தினை தேடும் பணியில் இன்று உறவினர்கள் ஈடுபட்டனர். இதன்போது அவரது சடலத்தின் ஒரு பகுதியினை நீரோடையில் இருந்து பொலிஸார்  மீட்டுள்ளனர்.

சடலத்தின் ஏனைய பகுதிகளை முதலைகள் உணவிற்காக உட்கொண்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். சடலத்தை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில்  மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40