கட்டுநாயக்க புகையிரத நிலையத்திற்கும் கட்டுநாயக்க அபிவருத்தி வலய புகையிரத நிலையத்திற்கும் இடைப்பட்ட ரயில் கடவையில் சிற்றுண்டி விற்பனையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி ஒன்று  விபத்துக்குள்ளாகியுள்ளது.இன்று காலை 6 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும்  புத்தளத்தில் இருந்து கொழும்பு  நோக்கி பயணித்த ரயிலிலேயே இவ்வாறு  சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

புகையிரத  கடவையில் சமிக்ஞை ஒலி எழுப்பப்பட்ட போதும் முச்சக்கர வண்டி சாரதியின் கவனயீனத்தால் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக விபத்தை அவதானித்தோர்  தெரிவித்தனர்.

 இதன்போது பலத்த காயங்களுக்கு உள்ளான முச்சக்கர வண்டி சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தை அடுத்து இன்று காலை புத்தளத்தில் இருந்து  கொழும்பு நோக்கிய அனைத்து புகையிரத சேவைகளும் தாமதமாகியமை குறிப்பிடதக்கது.