உலகை உலுக்­கிய சிரி­யாவைச் சேர்ந்த சிறுவன் அய்­லானின் மர­ணத்­திற்கு கார­ண­மான இரு­வ­ருக்கு 4 ஆண்­டுகள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த ஆண்டு செப்ெ­டம்பர் மாதம், துருக்­கி­யி­லி­ருந்து கிரீஸ் நாட்டின் மோஸ் தீவுக்கு சென்று கொண்­டி­ருந்த அக­திகள் படகு ஏஜியன் கடல் பகு­தியில் விபத்­துக்­குள்­ளா­னது.

இந்த விபத்­தின்­போது, அய்லான் குர்தி மற்றும் அந்தச் சிறு­வனின் சகோ­தரன், தாய் உள்­ளிட்ட 5 பேர் உயி­ரி­ழந்­தனர்.

மேற்­படி விபத்து தொடர்­பாக பொத்ரும் நகர நீதி­மன்­றத்தில் நடை­பெற்று வந்த வழக்கில், படகுப் பய­ணத்­துக்கு ஏற்­பாடு செய்­த­தற்­காக முவாஃப்கா அலாபஷ் மற்றும் ஏஸம் அல்ஃப்ராத் ஆகிய இரு­வ­ருக்கு ஆள் கடத்தல் வணி­கத்தில் ஈடு­பட்­ட­மைக்­காக கடந்த வெள்ளிக்­கி­ழ­மை­யன்று 4 ஆண்­டுகள் சிறைத் தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

துருக்­கியின் பொத்ரும் நகரில் கரை­யொ­துங்­கிய அய்­லானின் படம், ஊட­கங்­களில் வெளியாகி உலக அளவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.